டேவிட் கெமரூன் நெறிமுறைகளை மீறி செயற்ப்பட்டுவிட்டார்!
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் நெறிமுறைகளை மீறி செயற்ப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அவரது செயற்பாடு பிரித்தானியாவின் தற் போதைய வழிமுறையா என தேசிய சுதந்திர முன்னணி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் பிரிவிணை வாதத்தை போஷிக்கும் விதத்தில் செயற்ப்பட்டார். அவரது செயற்பாடுகள் இலங்கைக்கு எதிரானதாகவே அமைந்திருந்ததாக பிரதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரை பிரித்தானிய பிரதமர் சந்தித்த போது திட்டமிட்ட முறையில் பொறுத்தமற்ற இடத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இருவருடைய சந்திப்பையும் செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
இதன்மூலம் தமிழ் தலைவர்களுக்கு அரசாங்கம் எவ்வித வசதிகளையும் வழங்கவில்லையென காட்டுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்படும் பத்திரிகை நிறுவனமொன்றிற்கும் பிரித்தானிய பிரதமர் விஜயம் செய்திருந்தார். இலங்கையில் சமாதானம் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கவலையடைந்திருந்தது.
அந்நாட்டு பிரதமரின் செயற்பாடுகள் மூலம் இது உறுதியடைகின்றது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் இலங்கையில் முன்னெடுத்த செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
Permission to C4 is the mistake of the government.Injustice and partiality are very common among the people from all ranges around the world.A burning sense of injustice.It is noticeable.As we know C4 is the part of the British government.Migrant voters too play an important in Brits political life
Votes of migrants and power are vital for politicians rather than anything else.
Post a Comment