தலைமைத்துவச் சபை என்றொன்று ஐதேக யாப்பில் இல்லை!
இதுவரை கட்சி யாப்பினுள் உள்நுழையாத ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தின்போது, யாப்பினுள் உள்ளடங்கவுள்ளதாக அறியவருகின்றது.
அதற்கான முன்மொழிவும் கட்சித் தலைவர் பதவியை தேசிய தலைவர் என்று மாற்றுவதற்கும்நிறைவேற்றுச்சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கேற்ப, இதனை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவற்காக அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தின்போது, ஆவன செய்யப்படவுள்ளதாகவும் அறியவருகின்றது.
தலைமைத்துவ சபை கருஜயசூரியவின் தலைமைத்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர் தொகை 09 ஆகும்.
ஆயினும், அதில் நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச, தலதா அத்துகோரள ஆகியோர் அதனின்றும் விலகியுள்ளனர். அதனால் உறுப்பினர் தொகை 07ஆக உள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment