யாழில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உருவப் பதாகை இளைஞர்களால் தீ வைப்பு
உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உருவப் பதாகை இளைஞர்களால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நாவலர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, முதலமைச்சர் முன் பின் முரணான வகையில் கருத்து கூறுவது தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய பிரதமர் கமரூனை சந்தித்த போது காணாமல் போனோர் தொடர்பாகவும் கிழக்கு மாகாணம் தொடர்பாகவும் எந்த கருத்துக்களும் கூறவில்லை என சிலர் அதிருப்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 comments :
தேச துரோகிகளுக்கும் , பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவோரும் மிக கடுமையாக தண்டிக்க பட வேண்டும் , TNAயுடன் சேர்ந்ததால் நீதிபதி குற்றவாளி , பயங்கர வாதியாக மாறியது தான் கடைசியில் கண்ட பலன்.
விக்கினேஸ்வரன் முன் பின் முரணான வகையில் பயங்கரவாத புலிகள் பற்றி அடிக்கடி கருத்து கூறுவது உண்மை.
Post a Comment