Sunday, November 24, 2013

ஊடகங்களுக்கு எதிராக தடைகள் இல்லை- இராணுவ பேச்சாளர்!

ஏ.எப்.பீ ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியவிடம் வினவிய போது எந்தவிதமான தடைகளும் ஊடகங்களுக்கும் எதிராக விதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அது மட்டும்லாது அவ்வாறு நடந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது எனவும், ஏதேனும் அசௌகரியங்கள் நடந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதுடன் யுத்த சின்னங்கள் மற்றும் பொது இடங்களை புகைப்படம் பிடிக்கவும், வீடியோ படமெடுக்கவும் எவ்வித தடைகளும் கிடையாது என குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை நிலைமைகளை கண்டறிய வெளிநாட்டு ஊடகவியலளார்களை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com