தேவையாயின் எதிர்க்கட்சியொன்று அமைத்துத் தருகிறேன்...! - ஞானஸாரர்
விரும்பினால் தங்கள் அமைப்பின் மூலம் எதிர்க்கட்சியொன்றை அமைத்துத் தரவியலும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களுக்கு கட்சி அரசியல் செய்வதற்கு உத்தேசமில்லை. தேவையாயின் எங்களால் எதிர்க்கட்சியொன்றை அமைத்துத் தரவியலும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அதற்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற தேவை இல்லையே?
தேவையாயின் எங்களால் எதிர்க்கட்சியொன்றை அமைத்து, நல்லதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தி, வேண்டாத வேலைகள் செய்பவர்களை வெளியேற்ற எங்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நாங்கள் சொல்கிறோம்.“ என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment