இந்தியாவில் ஹோமியோபதி சிகிச்சையை நாடும் இளவரசர் சார்ள்சின் மனைவி!
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்சும், அவரது மனைவி கமீலா வும் இந்தியாவில் 15 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற் கொள்ள உள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை யன்று இளவரசரின் மனைவி பெங்களூரு வந்துள்ளார். அங்கிருந்து தனக்குத் தேவையான ஹோமியோபதி சிகிச் சைகளை மேற்கொள்ள அவர் ஒயிட்பீல்டில் இருக்கும் டாக்டர் ஐசக் மத்தாயின் சவுக்யா ஹோலிஸ்டிக் சுகாதார மையத்திற்கு சென்றார்.
இந்த மருத்துவமனையில் ஆயுர்வேதம், உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் நோய் நீக்குதல், ஹோமியோபதி, யோகா மற்றும் பல மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 30 ஏக்கர் இயற்கை விவசாய நிலப்பரப்பில் இந்த மருத்துவமனயை நடத்திவரும் டாக்டர்.மத்தாய் ஒரு சர்வதேச ஒருங் கிணைந்த மருத்துவராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் கடந்த சில ஆண்டு களாக பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
இந்த மருத்துவமனையில் உள்ள ஜனாதிபதி தொகுப்பில் ஒரு வாரம் தங்கும் இளவரசி கமீலா தனது உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுகின்றார். யோகா பயிற்சியிலும் இவர் இங்கு ஈடுபடுவார். இவருக்கு இயற்கை முறையிலான சைவ உணவே இங்கு பரிமாறப்படும். இவருடன் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பி னர்கள் அடங்கிய ஒரு குழு வந்துள்ளது. இவரது பாதுகாப்பிற்காக ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரின் ஒரு குழுவும் இங்கு தங்கியுள்ளது.
வரும் 7 ஆம் தேதி வரை இங்கு தங்கி புத்துணர்வு சிகிச்சைகளை மேற்கொள்ளும் இளவரசி கமீலா டெல்லி வரும் இளவரசர் சார்லசுடன் பின்னர் இணைந்து கொள்வார். அங்கிருந்து அவர்கள் இருவரும் மும்பை, கொச்சி, டேராடூன் மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment