Wednesday, November 13, 2013

இந்திய பிரதமர் மாபொரும் இராஜதந்திர தவறை இழைத்துள்ளார்- டொன் ஹெரல்ட்!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க, இந்திய பிரதமர் மேற்கொண்ட தீர்மானம், ஒரு இராஜதந்திர தவறாகுமென, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இல ங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிப்பதற்கு, இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் எடுத்த தீர்மானத்தை, பல இந்திய ஊடகங் கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தங்கள் காரணமாக, மாநா ட்டை புறக்கணிப்பதற்கு, பிரதமர் தீர்மானித்ததாக, மத்திய அமைச்சர் வீ. நாரா யணசாமி ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனினும், இந்திய பிரதமர் எடுத்த தீர் மானத்தை கடுமையாக விமர்சித்துள்ள டொன் ஹெரல்ட் பத்திரிகை, இதுவொரு பாரிய இராஜதந்திர தவறாகுமென, குறிப்பிட்டுள்ளது.

ஒருநாட்டின் வெளிநாட்டு கொள்கையை பணயம் வைப்பதற்கு, பிராந்திய அரசியல் கட்சிகளுக்கு இடமளிப்பது, முற்றிலும் தவறான ஒரு செயலென, அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமரின் முடிவை கடுமையாக விமர்சிக்கும் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை, தேர்தலொன்று நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில், பலவீனமான ஒர் அரசாங்கம் எடுக்கும் மோசமான தீர்மானம் இதுவென, குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இந்த முடிவால், இலங்கை, சீனா உட்பட பிராந்தியத்தின் பல சாலி நாடுகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு உருவாகுமென்றும், அப்பத்திரிகை மேலு ம் சுட்டிக்காட்டியுள்ளது.

2 comments :

Anonymous ,  November 13, 2013 at 9:43 AM  

Srilanka has to keep closer ties with countries which are having a closer relations with Srilanka,Those who are trying to keep away ,Let them do as they want.But Srilanka has to keep fine relations with every friendly countries,it can be China pakistan korea or iran ,it doesn't matter,We need a good atmosphere and a truthful relations.

Anonymous ,  November 13, 2013 at 11:22 AM  

This is the master plan of TN politicians in order to create ugly scenes in between the two countries,
in which they earn their benefits.
Totally speaking it is a diplomatic error of Hon PM of India.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com