Saturday, November 23, 2013

தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்டதால் அதிகாரிகளுக்கு தண்ணியில்லா காட்டிற்கு மாற்றம்!

சிறீலங்காக் கொடியினை தலைகீழாக பறக்க விட்ட குற்றச்சாட்டினில் யாழ்.மாட்டத்தை சேர்ந்த அரச அதி காரியொருவர் தண்ணியில்லாக்காட்டிற்கு விரட்டி அடி க்கப்பட்டுள்ளார். அண்மையினில் இடம்பெற்ற அமைச் சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றினில் ஏற்றி வைக்கப்பட்ட சிங்கக் கொடி தலை கீழாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.கொடியினை ஏற்றி வைத்திருந்த அமைச்சர்கள் கொடிக்கயிற்றினை மறுபுறமாக பிடித் திழுக்க தொடங்கியமையாலேயே தலைகீழாக கொடியேற்றப்பட்டமைக்கான காரண மென கூறப்படுகின்றது. எனினும் தவறு அவதானிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு கொடி உரிய வகையினில் பின்னர் ஏற்றிவைக்கப்பட்டுடிருந்தது.

இந்நிலையினில் தற்போது குறித்த சம்பவத்திற்கான பழிவாங்லாக அப்பிரதேச செயலக மூத்த அரச அதிகாரி தண்ணியில்லாக்காட்டிற்கு விரட்டியடிக்கப் பட்டுள்ளார். இதனிடையே அவரிடம் குறித்த சம்பவம் தொடர்பினில் விசாரணை களை மேற்கொள்ள விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வும் தனது விசாரணைகளை ஆரம்பிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment