ஐ.தே.க.புதிய தலைமைத்துவ சபையிலிருந்து விலகினார் சஜித்! சஜித் இல்லாமல் தலைமைத்துவ சபை இன்று கூடுகிறது!
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபையி லிருந்து தான் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். மகாசங்கத்தினருக்கு மதிப் பளிக்கும் வகையில் நீக்கிக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினர் முன்னிலையில் இணங்கி கையொப்ப மிட்ட நிபந்தனை மீறி செயற்பட முடியாது என்பதுடன், அவர்களின் யோசனைகளை நிரகரிக்க முடியாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். எனவே, மகா சங்கத்தினரின் யோசனை களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை முதல் முறையாக இன்று கூடுகிறது. ஐதேக கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் 11 மணியளவில் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் தலைமைத்துவ சபை நேற்று (04) அமைக்கப்பட்டது. அதன் தலைவராக கரு ஜயசூரியவும் ஏனைய உறுப்பினர்களாக சஜித், ரவி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த தலைமைத்துவ சபைக்கு செயற்குழுவின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தலைமைத்துவ சபைக்கு பெயர் சேர்க்கப்பட்டுள்ள போதும் அதில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதனால் தான் தலைமைத்துவ சபை கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என சஜித் அறிவித்துள்ளார்.
தலைமைத்துவ சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது ரணிலுக்கு மூவர் கரு மற்றும் சஜித்துக்கு தலா இருவர் என்ற அடிப்படையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
1 comments :
uneducated your father sold this country to LTTE , youneed to avoid politics in your life, we have our great Rajepakse family to done well to our country, me my self shame to listen what he done with LTTE , if he is president and supply waffens and money and more to LTTE , your father is not a true men, he is a Coward.
Post a Comment