மட்டக்களப்பில் விபச்சார விடுதி முற்றுகை! வவுனியா மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த இரு பெண்கள் கைது
மட்டக்களப்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்படடடதுடன் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு பெண்களையும் விபச்சார விடுதியை நிர்வகித்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய காத்தான்குடி பொலிஸார் நேற்று மாலை கல்லடியில் அமைந்துள்ள ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த வர்களென தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment