Monday, November 25, 2013

'உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்' - செல்வம் எம்பியின் வாக்குறுதி எங்கே போனது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பொது மக்களுக்கு வழங்கி வரும் வாக்குறுதிகள் அவரால் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்திற்குள் நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

இந் நிலையில் ஒரு வருட காலக்கெடுவானது முடிவடையும் நிலையிலும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பினால் தீர்வுத் திட்டத்தைக் காண முடியவில்லை. இதனடிப்படையில் தான் வழங்கிய வாக்குறுதியின் படி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உண்ணாவிரதம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தாமல் விடுவதற்காக பல்வேறு பொய்க் காரணங்களை முன்வைக்கும் முயற்சிகளில் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. அவர் தான் விட்ட சவாலை மறந்தாலும் மக்கள் அதனை மறந்துவிடவில்லை.

ரெலோ அமைப்பானது தமிழ் மக்களுக்காக ஆயுதம் தூக்கிய அமைப்பாகவும் அர்பணிப்புடன் கூடிய அமைப்பாகவும் இருக்கின்ற போதும் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பச்சோந்தி போன்று செயற்பட்டு ரெலோ அமைப்புக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டார் என அக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர். இனியாவது தமிழ் மக்கள் உணர்வார்களா?

1 comment:

  1. He is only heroin mafia from Mannar and Chriminel.

    ReplyDelete