மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது!
புத்தளம் கொட்டுகச்சிய–எதுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோ கத்திற்கு உட்படுத்திய 38 வயதான சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதுடன், இவரது தாயார் வேலை வாயப்புக்காக வெளிநாட்டு சென்றுள்ளாதால் இந்த சிறுமி தனது தங்கைகள் இருவருடன் தந்தையின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தந்தையால் தான் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்ததை தொடர்நது சிறுமியின் பாட்டியினால் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்பட்டதை அடுத்து சந்தேக நபரான சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பல தடவைகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment