இந்த நபர் பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவியுங்கள்! பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான, இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட பிரதான சந் தேகநபரை கைது செய்வதற்கான உதவியை பொலிஸார் பொதுமக்களிடம் நாடியுள்ளனர். இதற்கிணங்க குறித்த நபர் பற்றிய தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நபர் 973/16, பொதராவ வீதி, மாலம்பே என்ற முகவரி யிலுள்ள வீட்டின் உரிமையாளரான கம்மல்கொட லியனகே பண்துல குமார என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 0112422176, 0112326670 மற்றும் 0112320141-5 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும். இதேவேளை 0112380380 என்ற தொலைநகல் இலங்கங்களுக்கும் தகவல் களை வழங்க முடியும் என குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் அறிவிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment