அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை எதிர்த்து தாய்லாந்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் அங்கே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தில் பெண் பிரதமராக இருந்துவரும் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை பிரதமர் கொண்டு வந்தார்.
இதனை எதிர்க்கட்சியினர் எதிர்த்ததுடன் இந்த சட்டத்தின் மூலம் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று நாட்டை விட்டு வெளியேறிய தனது சகோதரரை காப்பாற்றவே இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார் என குற்றம் சாட்டியதையடுத்து தலைநகர் பாங்காக்கில் இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பிரதமர் பதவி விலகக் கோரியும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தொடங்கினர்.
வீதிகளில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் விரிவாகி தற்போது நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்பாகவும் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததோடு சில அலுவலங்களுக்குள் நுழைந்து பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்களை தாக்கியதால் நாடு முழுவதும் பதட்டம் நிலவுவதால் பிரதமர் சினவத்ரா நாடு முழுவதும் அவசர நிலையையும், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தையும் பிரகடனப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment