Friday, November 1, 2013

பாவம்: ஆனந்தசங்கரி தனது கட்சியை விஸ்தரிக்க முடிவு

தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் தனது கட்சியை மீண்டும் புனருத்தானம் செய்து விஸ்தரிக்க முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்மந்தனுக்கு போட்டியாக வலம் வந்த தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் மக்கள் தமிழ் தலைவர்களின் ஒற்றுமையை விரும்பியமையால் பின்னடைவை எதிர்கொண்டார்.

இதனால் அரசபடைகளின் பவல் வாகனத்தில் வலம் வந்த ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். இதன் விளைவாக தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு கட்சியாக வலம் வந்த தமிழர் விடுதலைக் கூட்டனியும் அதன் உதயசூரியன் சின்னமும் சங்கரியால் கைவிடப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தின் கீழ் கூட்டமைப்பில் இணைந்தார்.

இவ்வாறு ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த போதும் அவரை மூத்த தலைவர் என்றோ அல்லது கட்சி ஒன்றின் தலைவர் என்றோ கருதி தமிழரசுக் கட்சி நடக்கவில்லை. இதனால் அவ்வப் போது தமிழரசுக் கட்சிக்கு எதிராக அறிக்கைகளை விட்டு வந்த நிலையில், தனது இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்த சங்கரியார் வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் என்று கூட பார்க்காமல் ஆனந்தசங்கரிக்கு எதிராக பகிரங்கமாக செயற்பட்ட சிறிதரன் எம்.பி சங்கரியை தோல்வியடையச் செய்தார். கூட்டமைப்பின் சதியினால் தனக்கு அவமானம் ஏற்படும் வகையில் அமைந்த வடமாகாணசபைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மீண்டெழும் முயற்சியாக தனது கட்சியை மாவட்ட ரீதியாக பலப்படுத்தும் முயற்சியில் சங்கரியார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அடிக்கடி வடபகுதி வந்து செல்வதாக அறிய முடிகிறது.

வடபகுதியில் பல தரப்புக்களுடனும் பேசி வருகிறார். பாற்றா.. மக்களுக்காக சேவை செய்யனும் என்று என்னப்பா முயற்சி செய்கிறார்கள்.

No comments:

Post a Comment