Thursday, November 28, 2013

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுவது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் ஆராய்வு!

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டம் தொடர்பில் உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் உயிரியல்துறை அதிகாரி ஜீன் மரிவ், மற்றும் பொறியியலாளர் அடங்கிய பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று(28.11.2013) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிகள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தியை நீரியல்வளத்துறை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குருநகர் இறங்குதுறையையும் சென்று பார்வையிட்டதுடன் குருநகர் கடற்கரையின் ஆழம் தொடர்பில் கேட்டறியப்பட்டுள்ளதுடன், துறைமுகம் அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது குருநகர் இறங்குதுறையில் துறைமுகம் அமைக்கும்போது, அதற்கான எண்ணெய்க் களஞ்சியமானது அருகிலுள்ள இராணுவ முகாம் பகுதியிலே அமைக்க வேண்டி வரும் என்பதால் அந்தப் பகுதியிலிருக்கும் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com