டேவிட் கெமரன் சென்றபின் கேள்வி தொடுகிறார் பைஸர்! வடக்கில் முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கெமரன் எங்கிருந்தார்?
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் வடக்கிற்கு சென்று மனித உரிமை பற்றி பேசுகின்றார். வடக்கில் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது கெமரன் எங்கிருந்தார்? என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள் ளார். ஜனாதிபதியின் 68வது பிறந்த தினம் மற்றும் 2வது முறையாக பதவியேற்றதை முன்னிட்டு கொழும்பு இஹ் சானியா அரபு கல்லூரியில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும், கெமரன் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும், சர்வதேசத்திற்கு எடுத்து கூறியிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வினை சு.தொ. ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.மன்சில் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட து ஆ பிரார்த்த னையும் இடம்பெற்றது. மாணவர்களுக்கு அப்பியாச புத்தங்களும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment