Monday, November 4, 2013

விகாராதிபதிகளின் பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன: சிறுமி வைத்தியசாலையில்..

நாட்டில் பரவலாக விகாராதிபதிகளும்,பிக்குகளும் சிறுவர் துஸ்பிரயோகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 வயதுடைய சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குறித்த விஹாராதிபதி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறுவு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹலம்ப பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டவர் எனவும் இதற்கு முன்னரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சேனாநாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அட்டமஸ்கட பகுதியில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விகாராதிபதி மீது குற்றச்சாட்டுப்பட்டு அதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com