தனியார் பஸ்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டம்
தனியார் பஸ்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் முறைப்பாடு களுக்கு துரித தீர்வுகளை பெற்று கொடுப்பதற்காக ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளது என தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையா டல் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. இத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்து மாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தின் போது பணிப்புரை வழங்கினார்.
மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முறைப்பாடுகளும் அதற்கு முன்வைக்கப்படும் தீர்வுக ளையும் உடனடியாக அமைச்சு தெரிந்துகொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பயணிகளும் ஸ்கைப் தொழிநுட்பம் மூலம் தமது முறைப்பாடுகளை தெரிவிக் கலாம்.
அதிக கட்டணம் அறவிடுதல், உரிய நேரத்திற்கு குறிப்பிட்ட பிரதேசத்தை அடைய முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தீர்வினை பெற்று கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment