கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார யாழ். விஜயம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஞாயிற்றுக்கிழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் நல்லிணக்கத்திற்கான முரளி வெற்றிக் கிண்ண இருபது – 20 போட்டிகள் நேற்று சனிக்கிழமை முதல் வட மாகாணத்தின் ஐந்து இடங்களில் இடம்பெறுகின்றது.இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்துவதற்காகவே குமார் சங்கக்கார வட மாகணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளினை காலை பார்வையிட்ட பின்னர் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு வருகை தந்துள்ளார்.
0 comments :
Post a Comment