யாழ். சிவபூமி மாணவர்கள் மூவர் அவுஸ்திரேலியா பயணம்!
கோண்டாவில் சிவபூமி மனவளர்ச்சிப் பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டியில் பங்கு பற்றுவதற்காக சென்றுள்ளனர்.
சிவபூமி மாணவர்களான தனுஷன், ரோன் பிளைக்னோ, துஷ்யந்தன் ஆகிய மூன்று மாணவர்களும் கடந்த நான்கு மாத காலமாக யாழ் பல்கலைக்கழக உடற்பயிற்சி விரிவுரையாளர் செல்வி.ராதை அருளானந்தம் அவர்களின் வழிகாட்டலில் யாழ். பல்கலைக்கழக மைதானம் மற்றும் கொழும்பு சர்வதேச மைதானத்திலும் விசேட பயிற்சிகளைப் பெற்றனர்.
இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இம் மூன்று மாணவர்களுடன் இலஙகையின் சார்பில் 14 மாணவரும் இணைப்பாளர்களும் அவுஸ்ரெலியா பயணமாகியுள்ளனர்.
இக்குழுவில் உள்ள சிவபூமி பாடசாலை மாணவன் சி.துஷ்யந்தன் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு கிறீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஒட்டத்தில் வெள்ளிப்பதக்கம். பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவுஸ்ரேலிய பயணமான இக்குழுவில் வடமாகாண விசேட ஒலிம்பிக் பணிப்பாளர் இளம்பிறையன், இலங்கை ஒலிம்பிக் விசேட முகாமையாளர் பிரான்சிஸ்போல் ஆகியோரும் சென்றுள்ளனர்.
0 comments :
Post a Comment