Friday, November 22, 2013

மோதல் காலங்களில் ஏற்பட்ட உடைமையிழப்பு, உயிரிழப்புக்கள் குறித்த தொகை மதிப்பு ஆரம்பம்!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மோதல் காலங்களில் நடைபெற்ற உயிரிழப்புக்கள் மற்றும் உடைமையிழப்புகள் குறித்த தொகை மதிப்பு கணக்கெடுப்பு இன்று(22.11.2013) வெள்ளிக்கிழமை முதல் இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினூடு பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சும் இணைந்து இந்தத் தொகை மதிப்பீட்டினை மேற்கொள்ளுகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த தொகை மதிப்பீட்டின் போது பிரதேச செயலக மட்டத்தின் பிரிக்கப்பட்டு விரிவான தகவல்களைப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மோதல் காலங்களில் அதிக உயிரிழப்புக்களும், உடைமையிழப்புக்களும் வடக்கு- கிழக்கிலேயே ஏற்பட்டுள்ளன எனவே அவை குறித்து அக்கறையற்ற தன்மையோடு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சிவில் சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ள நிலையில், இந்த தொகை மதிப்பீட்டினை அரசாங்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment