Friday, November 15, 2013

பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸாரைத் தாக்கிய நபரை நையப்புடைந்தனர் பொலிஸார்! - தெனிப்பிட்டியில் சம்பவம்!

இன்று (15) வெலிகாமம் தெனிப்பிட்டிய பள்ளிவாசல் முன்பாக, மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக தலைக்கவசமின்றி சென்ற ஒருவரை வழிமறித்து, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளின் திறப்பை எடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமுற்ற குறித்த நபர், நாளை தெனிப்பிட்டிய ஹஸன் ஹுஸைன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள பாரிய கந்தூரிக்காக, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரைத் காரமாகத் தாக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த ஏனைய பொலிஸ் அத்தியட்சகர்கள் பொதுமக்கள் முன்னிலையில், பொலிஸ் அத்தியட்சகரைத் தாக்கிய நபரைக் காரசாரமாகத் தாக்கினர். தரையில் தூக்கிப் போட்டு அடித்துள்ளனர்.

பின்னர், குறித்த நபரை வெலிகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில், பொதுமக்கள் கணிசமாக நின்றிருக்கும் வேளை, வேகமாகச் சென்ற, பொலிஸாரைத் தாக்கிய நபர் கடும் போதையில் இருந்தார் என சம்பவத்தை நேரில் கண்டோர் இலங்கை நெற்றுக்குத் தெரிவித்தனர்.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  November 16, 2013 at 4:47 PM  

Well done cops.There should be an end to all criminal activities.They should know to respect peace order and law.If they don't there is no other way to teach them.This is the only way to handle such criminals.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com