Monday, November 25, 2013

அமெரிக்க சாதனையை முறியடித்த ரஷ்யா

செயற்கைக் கோள்களை அனுப்புவதில் ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது யாவரும் அறிந்ததே இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் அமெரிக்க ராக்கெட் ஒன்று 29 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.

இது நடந்த ஒரு வாரத்திற்குள் இந்தச்சாதனையை முறியடிக்கும் விதத்தில் ரஷ்ய விண்வெளி நிலையமான காஸ்மோடிராஸ் நிறுவனத்தின் டி.என்.இ.பி.ஆர். ராக்கெட் 2 நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு நாடுகளின் துபாய்சாட் 2 உள்ளிட்ட 32 செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது இதன் மூலம் அமெரிக்காவின் 29 செயற்கைக்கோள் சாதனையை முறியடித்துள்ளது.

No comments:

Post a Comment