Wednesday, November 13, 2013

மனித உரிமைகள் தொடர்பாக ஏனைய நாடுகளுக்கு உபதேசம் வழங்க, கனடிய பிரமதர் ஸ்ரீபன் தகுதியானவர் அல்ல - அவுஸ்திரேலிய பிரதமர்!

இலங்கை எந்தவகையில் மனித உரிமையை மீறியுள் ளது

சிவில் யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாக, படு கொலைகள் இடம்பெறாமல் சுதந்திரமாக வாழக்கூடிய சந் தர்ப்பத்தை உருவாக்குவதே, மிக முக்கியமான மனித உரிமையாகுமெனவும், யுத்தத்தின் பின்னர், இலங்கை மக் களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அவுஸ் திரேலிய பிரதமர் டோனி எபட் தெரிவித்துள்ளார்.

ரேடியோ 2 ஜீபி எனப்படும் வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவுஸ் திரேலிய பிரதமர் டோனி எபட் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர், இலங்கையின் நிலைமைகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ள பிரதமர், படுகொலைகள், வன்முறைகளின்றி வாழ்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது, மிகப்பெரிய மனித உரிமையாகுமென, தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அரச தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென, சுட்டிக்காட்டியுள்ள எபட், பயங்கரவாதத்தில் சிக்கிய வடபகுதி மக்களுக்கும், இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததென, தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மாநாட்டை புறக்கணிப்பது, அவுஸ்திரேலிய பசுமைக்கட்சி உறுப்பினர் லீ ரியானொன், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, எவ்வா றான கருத்துகளை வைத்திருந்த போதிலும், பொதுநலவாய மாநாட்டை தான் மதிப்பதனால், மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ளப்போவதாக, தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, பொதுநலவாய அமைப்பின் மிகச் சிறந்த பங்காளராக திகழ வேண்டுமென்பதே, தனது தேவையென்றும், எபட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சட்டவிரோத குடிகழ்வுகளை தடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற் சிகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ள அவர், நாடு கடத்தப்படும் குடியேற்றக் காரர்களை பொறுப்பேற்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளையும் பாரா ட்டியுள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவலிற்கும் இடையிலான உறவுகள் பலமாக உள்ளதாக தெரிவித்த அவுஸ் திரேலிய பிரதமர், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதே, தமது எதிர்பார்ப்பென, தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு, கனேடிய பிரதமர் ஸ்ரீவன் ஹாபர் மாநாட்டை புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்த அவுஸ் திரேலிய பிரதமர், மனித உரிமைகள் தொடர்பாக ஏனைய நாடுகளுக்கு உபதேசம் வழங்க, ஸ்ரீபன் ஹாபர் பெரும் பேச்சாளர் ஒருவர் அல்லவென்றும், அதனை அவர் அவ்வாறு நினைக்கக்கூடாது என்றும், அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  November 13, 2013 at 11:41 AM  

The best comments by the Hon PM of Australia that,CDN PM has lack of knowledge to speak about human rights violations.He has many things to speak about the human rights violations of around the world.But his situation we do understand that
he is being controlled by the immigrant voters.

Anonymous ,  November 13, 2013 at 2:13 PM  

absolutely correct

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com