Wednesday, November 13, 2013

காலாவதியான பரீட்சை முறைமைகளில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்போகின்றாராம் பந்துல!

காலாவதியான பரீட்சை முறைமைகளில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பரீட்சையை அடிப்படை யாக கொண்ட கல்வி முறைமையினால், மாணவர் களும், பெற்றோரும் பெரும் சுமைகளை எதிர்கொள் கின்றனர். அதில் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்து வோம். பழைய பரீட்சை முறைமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் ஒழுங்கான திட்டத்தில் கல்வி போதிக்கப்பட்டால், அவர் திறமையாக சித்தியெய்யும் வகையில் தற்போது வினாத் தாள்கள் உருவாக்கப்படுகின்றன. காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர் மாலை வரை மேலதிக அறிவை பெற்றுக்கொள்வதற்காக அலைந்து திரியும் பரீட்சை முறைமையில் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

கல்வி என்பது ஏழைகளின் நிரந்தர உரிமையாக மாற்றப்பட வேண்டுமானால், வர்த்தக நோக்கங்களுக்காக மாணவர்கள் மீது சுமத்தப்படும் சுமை, இல்லாதொ ழிக்கப்பட வேண்டும்.

சர்வதேச க்ரீன் க்ரொஸ் அமைப்பினால் நடாத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்றோர், ஜப்பானில் நடைபெறும் சுற்றாடல் மாநாட்டி ல ; பங்கேற்பதற்கான விமான பயண சீட்டுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வகுப்பறையிலேயே திறமைசாலிகள் உருவாகும் வகையில், வினாப்பத்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். 2016ம் ஆண்டில் கல்வியின் உண்மையான இலட்சியத்தை அடைவதற்கான செயற்திட்டங்களை, செயற்படுத்த முடியுமெ ன்றும், அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com