Tuesday, November 5, 2013

மேலுமொரு யுத்தத்தையும் அழிவையும் தடுப்பதற்கு உங்கள் நடவடிக்கை வேண்டும். சந்திரசிறிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தமிழன் மடல்.

இலங்கையில் மேலுமொரு யுத்தத்தையும் அழிவையும் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதன் பிரகாரம் அண்மையில் யாழ் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்புள்ள உறுப்பினர்கள் கண்காணிக்கப் படவேண்டும் என்றும் அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந் துள்ள தமிழ் மகனான டாக்டர் பிரேமச்சந்திரன் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜிஏ சந்திரசிறிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அதிமேதகு ஆளுநர் ஜீ. ஏ . சந்திரசிறி,
வடமாகாண ஆளுநர்,
இலங்கை.

03.11.2013

கனம் ஐயா,

நாம் இங்கு ஆழமாக சிந்திக்க வேண்டியது புதிதாக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் புலம்பெயர்ந்து தனி ஈழம் கிடைக்க வேண்டும் என மேலான எதிர்பார்ப்புக்களுடனும் ஆனால் மறைமுக நோக்கமாக நாட்டின் அபிவிருத்தியையும் அமைதியையும் சீர்குலைக்கும் நோக்குடனும் வாழும் மக்களிற்கும் இடையிலான உறவைப்பற்றியதாகும். கடந்த 30 வருடங்களாக இழந்த இன மற்றும் அனைத்து விதமான அழிவும் அவர்களது குறிக்கோளை அடைய போதாது என புலம்;பெயர் மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். எனவே வடக்கு கிழக்கில் இன்னுமொரு மீள் அமர்வு நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தீவிரமாக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் அடிக்கடி நிதி சேகரித்து வருகின்றனர். ஆனால் இந்த பணம் எங்கே போய் சேர்கின்றது என எந்த கணக்கும் இதுவரை இல்லை.

வெளிநாடுகளில் நடக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை நீங்களோ அல்லது இலங்கை அரசாங்கமோ தடுக்க முடியாது. ஆனால் இந்த பணம் வடக்கு கிழக்கில் நடக்கும் எந்தவொரு அபிவிருத்தி பணிக்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டியது உங்களது கடமை ஆகும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இந்த பணச்சேகரிப்பை ஆதரிக்கின்றார்கள் என்பதை கவனித்தோம். இந்த உறுப்பினர்கள் ஒருபுறம் சுமூகமான தீர்வுகளை முன்வைத்தாலும் கூட மற்றொருபுறம் இனரீதியான கருத்துக்களை முன்வைத்தவண்ணமே உள்ளனர். இவ்வாறான மறைமுகமான கருத்துக்களானது வடக்கு கிழக்கில் வாழும் இளைஞர் யுவதிகளை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தச்செய்யும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக உள்ளது. ஒருமுறை இந்த இளைய இரத்தத்தினர் கையில் ஆயுதம் ஏந்திவிட்டால் அவர்களே அனைத்து கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொள்வதுடன் பிரிவினைவாதத்திற்கு ஆதரவான அரசியல்வாதிகளை கொல்லவும் செய்வார்கள். இது ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றது. உதாரணமாக பழைய வுருடுகு தலைவர்கள் சமூகத்தில் சுமூகமாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் கிடைக்காதபோது கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தமையால் பிரிவினைவாதமே தீர்வாகப்பட்டது. இதனால் இவர்கள் 30 வருடங்களாக நாட்டை அழித்தவர்களிடம் தமது கட்டுப்பாடுகளை இழந்தனர்.

நாங்கள் உங்களிடமிருந்து வலிமையான கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். இலங்கை அரசாங்கம் தற்போது வலிமையான இராணுவப்படைகளை 1980களில் போல் வடக்கு கிழக்கில் கொண்டிருக்குமேயானால் யுத்தத்தையும் அழிவையும் தடுக்கலாம். எனது குடும்பத்தினர் எமது குடும்பத்திலிருந்து ஒருவரை இழந்ததுடன் சொத்துக்களையும் இழந்தனர். நாங்கள் இடம் பெயர்ந்தபோது பலமாக காயமடைந்ததுடன் எமது சொத்துக்களையும் இழந்து இன்று வரை துன்பப்படுகின்றோம். உண்மையில் இலங்கை அரசாங்கமானது வடக்கு கிழக்கில் பலமான இராணுவப்படையினரை வைத்து எம்மை காப்பாற்றாமல் போனதன் காரணமாக எமது இழப்புக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும்.
தேவையான நடவடிக்கைகள்:-

1. இலங்கை அரசாங்கத்தினர் மேலும் 20 வருடங்களிற்கு அல்லது அதற்கு மேல் இன்னொரு யுத்தம் தோன்றமுடியாத காலநிலை வரை வலிமையான இராணுவப்படையினரை வடக்கு கிழக்கில் நிலை நிறுத்த வேண்டும். அமேரிக்கா தற்போதுவரை தனது படையினரை ஜப்பானில் நிலையிருத்தி தமது பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது. இதை ஏன் இலங்கை அரசாங்கத்தினால் செய்யமுடியாது? குடிமக்களின் அபிவிருத்தி தேவைகளில் இராணுவத்தினரை பயண்படுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கமாட்டாது. இரண்டு பிரதான காரணங்கள்:-

• மனித வளத்தை முழுமையாக பயன்படுத்தல்

2. புதிய மாகாண சபையில் யார் தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளனரோ யார் இன்னொரு யுத்தம் ஏற்பட்டால் தமது குறிக்கோளை அடைந்துவிடலாம் என்று நினைக்கின்றார்களோ அவர்கள் நடவடிக்கை தொடர்பில் முழுமையான கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இம்மாகாணசபை உறுப்பினர்கள் யாராவது பண உதவி பெற்றுக்கொண்டால் இது தொடர்பான கணக்கறிக்கை உங்களிற்கும் பொதுமக்களிற்கும் காண்பிக்கப்படவேண்டியதுடன் அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என தெரிவிக்கவும் வேண்டும். எல்லா மேலைத்தேய நாடுகளும் அவர்களது அரசியல்வாதிகள் மேலும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதிகள் மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளபோது இலங்கையால் மட்டும் ஏன் அவ்வாறு செய்யமுடியாது? இந்த எண்ணிலடங்கா பணத்தை நாட்டினுள் இப்போது கொண்டுவருவதன் மூலம் பின்பு இந்த பணத்தின் மூலம் செய்யப்படவிருக்கும் நடவடிக்கைகளை தடுக்காம்.

இந்தக்கடிதமானது உண்மையுடன் எழுதப்பட்டுள்ளதுடன் இக்கடிதத்தின் பிரதியினை முதலமைச்சருடனும் மற்ற மாகாணசபை உறுப்பிணர்களுடனும் பகிர்ந்துகொள்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் உண்மையுள்ள,

Dr. R. பிரேமச்சந்திரன்
Australia

9 comments :

Anonymous ,  November 5, 2013 at 4:55 AM  

டாக்டர் பிரேமச்சந்திரா அவர்களே உங்கள் கடிதத்தில் சந்தேகமுள்ளது. ஏனனில் நோயை குணப்படுத்துவதை விட்டு நோயை விமர்சனம் செய்வது போலுள்ளது.

எமது நாட்டில் இனரீதியான அடிப்படை பிரச்சனகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. சிறுபான்மை மக்களும், சிங்கள மக்களை போல் சகல உரிமைகளையும் பெற்று இலங்கை மக்கள் எல்லோரும் பாகுபாடு இன்றி நாம் எல்லோரும் இந் நாட்டவர் என்று வாழகூடிய சூழ்நிலையை உருவாக்க எந்த ஒரு அரசாங்கமும் தயாராக இல்லை என்பதையும் மறுக்க முடியாது..

இலங்கையில் எந்த ஒரு விடயத்திலும் தரப்படுத்தலை விட மோசமான இனப் பாகுபாடு காட்டப்படுகின்றது என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக அரசாங்கத்தில் கணிசமான அளவு தமிழ் மந்திரிகள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தமிழ் பகுதிகளில் இராணுவம், பொலிசில் அதிகமாக தமிழர்கள் இல்லை. பாகுபாடு இன்றி எல்லோரும் தகுதி அடிப்படையில்
சேர்க்கப்படிருந்தால் பிரச்சனைகளுக்கு எந்த ஒரு சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருக்க மாட்டாது அல்லவா.

அத்துடன் சிங்களபடை , சிங்கள் அதிகாரிகள், சிங்கள அரசாங்கம் என்ற கருத்துக்களுக்கு நிச்சயம் இடம் ஏற்பட்டிருக்காது அல்லவா. ஆகவே இனப்பாகுபாடுக்கெதிரான, அடக்குமுறைக்கான, விடுதலைக்கான போராட்டங்கள் எழுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்காது அல்லவா .

உண்மையில் புலிகள், புலம்பெயர் பினாமிகள், மற்றும் அரசியல் கோமாளிகள் எவரும் எமது பிரதிநிதிகள் அல்ல. அவர்களை நாம் ஒருபோதும் விரும்பியாதுமில்லை. ஆதரித்ததுமில்லை. ஆனால், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளினால் நாம் மத்தளம் போல் இருபக்ககளிலும் அடி வாங்கிகொண்டிருந்தோம். அதுமட்டுமா அவர்களால் நாம் எண்ணிலடங்காத இழப்புக்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் கண்டுள்ளோம்.

பேயிகளிடமிருந்து விடுபாடாலும் பிசாசுகளிமிருந்து முற்றாக விடுபடவில்லை என்பதே எமது நிலைமை.

அதற்கு மேலாக, இன்றும் கூட எமது நாட்டில் அடிப்படை இன, மத பாகுபாடு பிரச்சனைகள் நிதந்தரமாக தீர்த்து வைக்கப்படவில்லை.

இனிவரும் காலங்களிலாவது இலங்கையில் சகல மக்களும் ஒற்றுமையாக, சகோதர மனப்பான்மையுடன் வாழகூடிய வழிமுறைகளை ஏற்படுத்த எவரும் முன்வரவும் வில்லை.

முதலில் நோயை குணப்படுத்த வேண்டும்.

அபிவிருத்தியை விட அடிப்படை பிரச்சனைகளுக்கு ஒரு நிதந்தர தீர்வு தேவை. அப்போது தான் நித்தர அமைதி, சுபீட்சம் ஏற்படும், அதனால் நாடும் வளம் பெரும்.

மனம் உண்டானால் நிச்சயம் இடம் உண்டு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட எமது ஜனாதிபதி நினைத்தால் நடக்கும்.

Anonymous ,  November 5, 2013 at 6:37 AM  

Prevention is better than cure.A part of the great Bible was written
By Luke.He too a doctor.We cannot just put Dr.Premachandran point of views aside.His views also to be taken into consideration.Repeating the same bullshit stories cannot bring peace or unity in the country.
We look for a peaceful nation and
not a volcanic atmosphere.

Anonymous ,  November 5, 2013 at 9:25 AM  

Tunnel vision may bring always negative results.The older political thoughts are unsucceful ones.Live accordingly to the circumstances,as it scientifically proved survival of the fittest.

Anonymous ,  November 5, 2013 at 9:50 AM  

Dear remachandra,

well written. Who have a basicle problem?? Only tamils says thay have a basicle problems, basicle prblems. Thay will say this til thay dead. This Group are for allways wants wantsand thay will not be a satisfied.

I am agry and Accept Sri Lankan forces to be in North province til more then 20 - 30 period.

Becouse,there are som Tamil politiciens still working With diasporas ang getteing found supports from diasporas for make separate state. Sritharan MP have been to europe and he collected hes Collection from diasporas nearly, so where thos all founds going???

What thay do???

Thay still getting younsters spport in Kilinochchi District to form a terror work.

Those all thinks controlled by a government and forces.

Leeve all People to live, where thay want,wich part thay wants like tamilins have. This is Natural for every Sri Lankan.

Tamiliens,Singhalise and Musleems -all People ar Sri Lankans only! Not only tamils are tamils!

Anonymous ,  November 5, 2013 at 1:50 PM  

It's time to cure the long run disease.
The fundamental problems can be easily solved by the powerful president and his government..

Why not yet?

Anonymous ,  November 5, 2013 at 4:12 PM  

It is really hard to understand that those who expose themselves as the tamil political leaders in SL still in the primitive stages or they pretend themselves as in the primitive stages
Our awakening in this matter is very important.A united srilanka is the only solution to have a good peace and prosperity.
We need more Premachandrans from abroad to give good poltical pictures for the locals to learn and act.

Anonymous ,  November 5, 2013 at 8:39 PM  


Dear commentators,

Some comments are really acceptable.
The main problem in Sri Lanka is racial and religious discrimination that makes the divisions between the people.

If you analyst the constitutional systems, multicultural and diversity laws, general rules and regulations of the developed and advanced countries in European, north American, Australian continents, You will be impressed and surprised for sure.

There are no space for any discrimination.
All the people are treated as one nation.

Our politicians and the people know that.
But, they don't want to move from their usual primitive stage. Why?

Anonymous ,  November 6, 2013 at 6:32 PM  

Some one saying that: Europe,North America and Australian continents are Peace full and treating People as a same nation!

Why do not take Asia?? We are talking about Sri Lanka, which is the best country for living People in Asia.

Europe, where much much discriminations are going on under the table and wast Place are USA.

Anonymous ,  November 7, 2013 at 3:11 AM  


It's better not write any stupid none sense comments as you think. Write some good points to think.

Please think before write. Don't write anything like a kinder garden child.

Thank You

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com