Wednesday, November 27, 2013

கொகா கோலாவுக்கு மூன்று மாத தடை! கெபத்திகொல்லாவ நீதிமன்றம்

இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மூன்று மாத கால தடையை கெபத்திகொல்லாவ நீதிமன்றம் விதித்துள்ளது.

கொகா கோலா நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொதி இலக்கம் போன்றன குறிப்பிடப்படாமல் கொகா கோலா போத்தல்கள் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருந்தமைக்காக இந்த தடை உத்தரவு குறித்த நீதிமன்றத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 26ஆம் இலக்க, 18ஆம் சரத்தின் (2)ஆம் பிரிவுக்கு அமைவாக, மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் உணவு மற்றும் பான உற்பத்தி வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் நிறுவனத்துக்கு 15000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கம்பனி தீர்மானித்துள்ளதாக அறிய வந்துள்ளது.

No comments:

Post a Comment