Friday, November 29, 2013

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை – ஜே.சிறிரங்கா

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.

சிலோன் டீ என்ற பெயரை உலகிற்கு எடுத்துச் சென்றது எமது மக்களே. எனினும், எமது மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது.

இன்னமும் மக்கள் லயன் அறைகளில் மிக நெருக்கடியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

பெருந்தோட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ஏழு பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றில் உரைகளை எழுதிப் படிக்கும் கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஏதேனும் குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

முழு உரையையும் வாசிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது ஓர் பின்தங்கிய நிலையாகவே கருதப்பட வேண்டும்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என சிறிரங்கா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment