விசேட தேவையுள்ளவர்களுக்கு உதவும் முகமாக அவர்களது நாய் குரைக்கும்போது செயற்படும் சலவை இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சலவை இயந்திரம் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேட கைப்பிடியையும் கொண்டமைந்துள்ளது.
அத்துடன் ‘வூப் டு வோஷ்’ என்ற இந்த சலவை இயந்திரம் நாய்களின் குரைப்புக்கு உணர்திறன் உள்ள கருவியொன்றைக் கொண்டுள்ளது.
விசேட தேவையுள்ளவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய் சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் சலவை இயந்திரம் செயற்பட ஆரம்பிக்கிறது.
இது தொடர்பில் ஜே.ரி.எம்.சேர்விஸ் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ஜோன் மிடில்டன் விபரிக்கையில், “விசேட தேவையுள்ளவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் முகமாக தேசிய சப்போர்ட் டோக்ஸ் தொண்டு ஸ்தாபனம் இந்த விசேட சலவை இயந்திரங்களை கையாளுவதற்கு நாய்களுக்கு பயிற்சியளித்து வருவதாக தெரிவித்தார்.
மேற்படி சலவை இயந்திரம் தன்னிச்சையாக தேவையான அளவு நீரை பயன்படுத்தி சலவையை மேற்கொள்கின்றது.
No comments:
Post a Comment