விஜய நம்பியாரை முல்லைத்தீவுக்குச் செல்ல அனுமதித்திருந்தால் பிரபாகரன் தப்பியிருப்பார் - கோத்தபாய ராஜபக்ஷ
புலிகள் மிகைப்படுத்தும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் சுமத்த முயற்சிக்கின்றனர். ஆனால் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் யுத்தத்தின்போது கொல்லப்படவில்லை என பத்திரிகையொன்றின் நேர்காணலின் போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
நேர்காணல்
கே: பாதுகாப்புச் செயலாளராக கடமையை பொறுப்பேற்றபோது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் இருந்ததா?
ப: சமாதானத்தைக் கொண்டுவருவதே குறிக்கோளாக இருந்தது. அதனை அடைய இரு வழிகள் இருந்தன. ஒன்று பேச்சுவார்த்தை மற்றயது யுத்தம் புரிதல். முன்னாள் ஜனாதிபதிகள் இவ்விரு வழிகளையும் மேற்கொண்டிருந்தனர். ஜே.ஆர் ஜயவர்தன காலத்திலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க காலம் வரை இவ்வழி முறைகளே பின்பற்றப்பட்டன. இந்தியா மற்றும் நோர்வே நாடுகளின் உதவிகளுடன் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இதனையே செய்தார். இதேவேளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் புலிகளைத் தோற்கடிக்கமுடியாது எனும் கருத்து நிலவியது. ஆனால் நாம் சரியான வழியில் சென்றால் வெற்றிபெறலாம் என நான் திடமாக இருந்தேன். எனவே ஜனாதிபதியவர்கள் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கினார்கள் புலிகளோ அவர்கள் எதிர்பார்த்தவாறு வழமையான நுட்பத்தைக் கையாண்டார்கள். அதனையடுத்து ஜனாதிபதியவர்கள் இந்நியாவிடமும் பாக்கிஸ்தானிடமும் இராணுவ உதவிகளை கோரினார்கள்.
கே: புலிகள் 2005 ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு ஏன் மக்களைக் கேட்டுக்கொண்டார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?
ப: மக்கள் மஹிந்தராஜபக்ஷ யாரென்று அறிந்திராத போதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். ஏனெனில் பிரதமராக இருந்திருந்தால் கூட அவரைப்பற்றி அறிந்திருப்பார்கள். பிரபாகரன் நினைத்திருக்கூடும் அவர் ஒரு பலவீனமான ஆளுமை கொண்டவர் என்று. மறுபுறம் பார்த்தால் பிரபாகரனுக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை. அவருக்கு யார் ஜனாதிபதியாக வந்தாலும் பிரச்சினையில்லை அவரது கொள்கைக்கே முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணத்துக்கு அவர் தோல்வியின் விளிம்பில் இருந்த போது கே.பி தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு வெளியேறுமாறு கேட்டிருந்தார். அதனை அவர் நிராகரித்திருந்தார். அவர் உண்மை நிலைமையை காண முடியாதவராகவே இருந்தார்.
கே: நீங்களும் ஜனாதிபதியும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்த சரியான சந்தர்ப்பம் உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா?
ப: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்தும் அம்பாறை மாவட்டம் விடிவிக்கப்பட்டதையடுத்தும் இராணுவ சேவையில் எனக்கிருந்த அனுபவத்தைக் கொண்டு யுத்தத்தைத் தொடர ஜனாதிபதி விரும்பியிருந்தார். எனினும் எனது நியமனத்தை நிச்சயம் பிரபாகரன் விரும்பியிருக்கமாட்டார் என்பது உறுதி. அத்தருணத்திலிருந்தே நான் தயாராகிவிட்டேன்.
கே: அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையிலே யுத்தத்துக்கு தயாராகியிருந்தீர்களா?
ப: ஆம் ஜனாதிபதி தெளிவாக இதனைக் கூறியிருந்தார். நாம் இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கோரியிருந்தோம். நோர்வேயின் அனுசரனையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே இடம் பெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தையை அவர் நிறுத்தினார். இராணுவ நடவடிக்கைக்கு தேவையானவற்றை மேற்கொள்ளுமாறு படையினருக்கு பணிப்புரை விடுத்தார்.
கே: முதல் வெடிப்பு சம்பவம் மாவிலாறு நீர் பிரச்சினையில் ஆரமபமானது. அப்படித்தானே?
ப: புலிகள் யுத்தத்தை ஆரம்பித்து விட்டார்கள் என்று எமக்கு காட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது இல்லாவிடில் பழி எம்மீது வந்திருக்கும். அவர்கள் இரண்டு தடவை கடுமையாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளார்கள். ஒன்று கெப்பிட்டிகொல்லாவ பேருந்து குண்டு வெடிப்பு, இதனால் ஜனாதிபதி மிகவும் அதிர்ச்சியடைந்திருந்தார். இரண்டாவது நீர்ப்பிரச்சினை நாம் மதகை திறப்பது தொடர்பில் ஆலோசித்துக் கொண்டிருந்த வேளை அவர்கள் மூதூர், முகமாலை மற்றும் ஊர்காவற்துறை என்பவற்றில் தாக்குதல்களை ஆரம்பித்தார்கள் அவர்கள் முதல் தாக்குதல்களிலே அப்பிரதேசங்களை கைப்பற்ற நினைத்தார்கள்.
கே: முதலாவது பாரிய வெற்றி எது?
ப: கிழக்கு மாகாணத்தை விடுவித்ததுடன் நாம் திடமான நம்பிக்கையுடன் இருந்தோம். கடந்த காலங்களில் பலசந்தர்ப்பங்களில் கிழக்கு மாகாணம் விடுக்கப்பட்டிருந்ததுதான். எதிர்க்கட்டசித் தலைவரும் மற்றவர்களும் இது பாரிய வெற்றியல்ல எனக் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு விடயத்தை அவதானிக்கவில்லை அதாவது நாம் பிரதேசங்களை மாத்திரம் விடுவிக்கவில்லை அங்குலம் அங்குலமாக புலிகள் மீண்டும் ஊடுறுவ முடியாதவாறு பலப்படுத்திவிட்டோம். இந்நோக்கத்துக்காக பாரிய மனித வளத்தை அங்கு பயன்படுத்தினோம். ஆயினும் முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இதனைச் செய்ய தவறியிருந்தன. எனினும் பிரபாகரன் பல தடவை இப்பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்காக முயற்சிகள் மேற் கொண்ட போதிலும் அது அவர்களுக்கு தோல்வியிலே முடிந்தது. நாம் எமது காலாற்படை மற்றும் கடற்படையினரைக் கொண்டு அவர்களது முயற்சிகளை முறியடித்தோம் இதுவே எமக்குவெற்றிக்கு வழிகோலியது.
கே:அந்த சந்தர்ப்பத்தில் விஜய நம்பியார் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளவில்லையா?
ப: இல்லை. அது பின்னர்தான் முயற்சிக்கப்பட்டது.
கே: எவ்வாறு அதனை நிராகரித்தீர்?
ப: நாம் தெளிவாக கூறிவிட்டோம் அது சாத்தியப்படாது என்று. நாங்கள் அதிகமாக தியாகம் செய்துவிட்டோம். பிரபாகரன் பாதுகாக்கப்பட்டால் என்ன நடக்கும் என எம்மால் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. அவர் யுத்த நிறுத்தத்துக்கு தயார் என்றிருந்தால் ஒரு போதும் ஆயுதங்களை கீழே போட மாட்டார் பின்னர் தாக்குதல்களை ஆரம்பிப்பார்.
கே: நீங்கள் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கேட்டீர்களா?
ப:ஆம். பல தடவை கேட்டிருந்தோம்.
கே: யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும் அவ்வாறு கேட்டீர்களா?
ப: ஆம். அப்போது முன்னரைப் போன்றே கேட்டிருந்தோம்
கே: உங்களின் வேண்டுகோளுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லையா?
ப: இல்லை. அவர்கள் கடைசித் தருவாயிலும் சரணடைய முன்வரவில்லை?
கே : குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை குறித்து ஜெனீவாவின் அழுத்தங்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள்?
ப: காணாமல் போனோர் தொடர்பில் பரிசீலிக்கும் முகமாக ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார். நான் இந்த குழுவின் முன்பு சாட்சியங்களை அளித்துள்ளேன் மற்றும் காணாமல் போன ஒவ்வொருவர் தொடர்பிலும் நுணுக்கமாய் ஆராயுமாரும் விளக்கியுள்ளேன். ஒருவர் போரில் இறந்திருந்தால் விடுதலை புலிகள் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றே நான் சொல்வேன். என் பிரச்சனை காணாமல் போனவர்கள் அல்ல , எவ்வாரு காணாமல் போனார்கள் என்பதே. தமிழீழ விடுதலை புலிகளிடன் குறிப்பிட்ட அளவு மனிதவளமே இருந்ததை எவரும் அறிந்ததே. அவர்கள் போராடியே கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்படவில்லை. உதாரணமாக , நாம் பொட்டு அம்மான் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்போது அவர் காணாமல் போயுள்ளார். அவர்கள் உயிரோடு இருப்பதாக அவரது மனைவி மற்றும் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருப்பினும், அவரது உடல் மீட்கப்படவில்லை என்பதால் அவர் காணாமல் போனவராகவே கருதப்படுவார். அதிர்ஷ்டவசமாக , பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது . இல்லாவிடின் அவர் காணாமல் போனதாகவே வகைப்படுத்தப்பட்டிருப்பார். எத்தனை அடையாளம் தெரியாத உடல்கள் இருந்தன ? எத்தனை விடுதலை புலிகளின் தலைவர்களது இறந்த உடல்கள் அடையாளம்காணப்பட்டன ? பொட்டு அம்மன் இந்தியவில் அல்லது பிரான்சில் இருப்பதாக ஒரு வதந்தியும் பரவியது . ஒருவர் தனது உறவினர் எவரேனும் இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போனதாக தகுந்த ஆதாரம் தந்தால் , நாங்கள் அது தொடர்பில் ஆய்வு செய்ய முடியும் . ஆனால் எமக்கு இது தொடர்பில் தெளிவான ஆதாரம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. சிலர் தங்கள் உறவுகள் கொழும்பிற்கு வந்து காணாமல் போனதாக கூறுகின்றனர். ஆதாரம் என்ன? நாம் அவர்கள் கொழும்புக்கு செல்லும் போது பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். தற்கொலை போராளிகள் இருந்தனர். ஹில்டன் ஹோட்டல் முன்பாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். நாங்கள் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் அடையாளத்தை கண்டறிந்தோம். அவர் திருகோணமலையை தேர்ந்தவர். முஸ்லீம் என்ற போர்வையில் மற்றொருவருடன் மோட்டார் சைக்கிள் கொழும்பு வந்துள்ளார். அவர் கொழும்பு செல்ல ஒரு நாளுக்கு முன்பே, அவரது தாயார் தனது மகன் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தார். இதுதான் உண்மை.
கே: ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஒரு உள்ளூர் அரசாங்க உறுப்பினர் புலிகளின் கல்லறைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என முன்மொழிந்தார். மறுபுறம், இராணுவத்தின் வசமுள்ள நிலத்தை திரும்ப ஒப்டைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் அமிர்தலிங்கத்தின் மகன் ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளார். நீங்கள் எப்படி இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளீர்கள்?
ப: புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவரும் பயங்கரவாதியாகவே கருதப்படுவார். இதனை நாம் நினைவில் வைக்கவேண்டும். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்பாகவோ அதன் உறுப்பினர்கள் தொடர்பாகவோ அல்லது பிரபாகரன் பற்றியோ பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.அவர்களுக்கு கல்லறை கட்டுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. உள்ளூராட்சி மன்ற அரச உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்லறைகள் அமைப்பதானது மக்களுக்கான சேவை இல்லை.அது தேவையற்றது.அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.அவற்றை நாம் இலகுவாக அகற்றி விடுவோம்.நாங்கள் 30 வருடங்களாக துயரப்பட்டுவிட்டோம். இனி ஒருபோதும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம். காணிகளை பற்றி குறிப்பிடுவதானால், ஆம் இராணுவமுகாம்கள் எமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் அதிகமானவை அரச காணிகளாகும்.இராணுவத்திற்கு தேவையான இடங்களை அமேரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது வடக்கின் முதலமைச்சரோ தீர்மானிக்க முடியாது. அதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அல்லது முப்படைத்தளபதிகள் மட்டுமே. நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது யாழ்ப்பாணமானது விடுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இராணுவ காவலரன்களும் பாதுகாப்பு அணைகளும் நிறைந்திருந்தன தற்போது அவைகள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கே: இவ் வேலைத்திட்டத்தை நிறைவு செய்தவுடன் உங்களுக்கு அரசியளுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் உள்ளதா ?
ப: நாங்கள் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டுமானால் அரசியலில் இருக்க வேண்டும் என்பதில்லை. ஜனாதிபதியவர்கள் எனக்கு பாதுகாப்புச் செயலாளராக சேவையாற்றும் சந்தர்ப்பத்தை தந்துள்ளார். அத்துடன் நான் நகர அபிவிருத்திக்கும் எனது சேவையை வழங்கிவருகின்றேன்.அதில் என்னை பூரணமாக ஈடுபடுத்தியுள்ளதுடன் நான் மிகவும் உளத்திருப்தியுடன் ஈடுபட்டுவருகின்றேன். அதுமாத்திரமின்றி எனது குடும்பத்தில் அதிகமானவர்கள் அரசியலில் உள்ளனர்.
கே: உங்கள் மகனை அரசியலில் ஈடுபடுத்தும் எண்ணம் உள்ளதா ?
ப: அவருக்கு அது கடினமானது. ஏற்கனவே எமது குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினரில் இருவர் அரசியலில் உள்ளனர்.
2 comments :
Nambiar is number one ck in the vworld
LTTE made lots of mistakes.
But, the government make the same mistakes now. Still the fundamental problem is not considered wisely.
Post a Comment