Monday, November 25, 2013

மஹிந்த சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை : விக்கினேஸ்வரன்

வட­மா­காண சபையில் தாங்கள் செயற்­பட முடி­யாத வகையில் பல்­வேறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­வ­தா­கவும், வட­மா­காண சபையின் அலு­வ­ல­கத்தில் பணி­யாற்­று­கின்ற அலு­வ­லர்­க­ளி­னா­லேயே இந்த முட்டுக்­கட்­டைகள் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

மஹிந்த சிந்­த­னையை முன்­வைத்து வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்­களை மக் கள் நிரா­க­ரித்­து­விட்­டனர். மஹிந்த சிந்­தனை என்ற தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டைய சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்ற தேவை எங்­க­ளுக்கு கிடை­யாது என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

வட­மா­காண சபை பத­வி­யேற்று இரண்டு மாதங்­க­ளா­கின்­றன. இந்த நிலையில் அந்த சபையின் செயற்­பா­டு­களில் என்ன வகை­யான முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன என கேட்­ட­போதே முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.

வவு­னியா பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் அழைப்பின் பேரில் கிரா­மிய அபி­வி­ருத்தி வங்­கிக்­கி­ளை­யொன்றை திறந்து வைப்­ப­தற்­காக நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் வவு­னி­யா­வுக்கு வருகை தந்­தி­ருந்தார்.

வவு­னியா குடி­யி­ருப்பு பிள்­ளையார் கோவிலில் இடம்­பெற்ற விசேட பூஜை வழி­பாட்டில் முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன், வட­மா­காண சுகா­தார அமைச்சர் ப.சத்­தி­ய­லிங்கம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், வினோ­நோ­க­ரா­த­லிங்கம், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான இந்­தி­ர­ராஜா, தியா­க­ராஜா மற்றும் பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்கத் தலைவர் சுப்­பி­ர­ம­ணியம், சிக்­கன கட­னு­தவி கூட்­டு­ற­வுச்­சங்கத் தலைவர் நா.சேனா­தி­ராஜா, கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உதவி ஆணை­யாளர் மற்றும் பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்க அதி­கா­ரிகள் பணி­யா­ளர்கள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் கலந்து கொண்­டனர்.

பூஜை வழி­பாட்டின் பின்னர் மலர் மாலை அணி­வித்து நாத­சுர மேள­தா­ளங்கள் சகிதம் விருந்­தி­னர்கள் ஊர்­வ­ல­மாக வவு­னியா நகர வீதி வழி­யாக அழைத்துச் செல்­லப்­பட்­டனர். குடி­யி­ருப்பு வீதிச் சந்­தியில் மொத்த விற்­பனைச் சந்­தைக்கு எதிரில் வவு­னியா நகர வர்த்­தக சங்கத் தலைவர் ரீ.கே.இரா­ஜ­லிங்கம் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள், முத­ல­மைச்­ச­ருக்கு மலர் மாலை சூட்டி, பொன்­னாடை போர்த்தி வர­வேற்­றனர். அதே­போன்று மொத்த விற்­பனைச் சந்தை வர்த்­த­கர்­களும் முத­ல­மைச்­ச­ரையும் உடன் வருகை தந்த விருந்­தி­னர்­க­ளையும் வர­வேற்­றனர்.

பள்­ளி­வாசல் சந்­தியில் முஸ்லிம் பிர­மு­கரும் வர்த்­த­க­ரு­மா­கிய ஆரிப் மற்றும் பள்­ளி­வாசல் சபை­யினர் முத­ல­மைச்­ச­ருக்கு பொன்­னாடை போர்த்தி வர­வேற்று பள்­ளிக்குள் அழைத்துச் சென்று கௌர­வ­ம­ளித்­தனர்.

இத­னை­ய­டுத்து பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் கிரா­மிய வங்கிக் கிளை­யொன்றை முத­ல­மைச்சர் நாடா­வெட்டி திறந்து வைத்து வங்கி நட­வ­டிக்­கை­களை வைபவ ரீதி­யாக ஆரம்­பித்து வைத்தார். அத­னை­ய­டுத்து அங்கு நடை­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­றினார்.
பின்னர் அவர் வவு­னியா நூல­கத்­திற்குச் சென்று நூல­கத்தைப் பார்­வை­யிட்டார். அப்­போதுஇ அவ­ரிடம் வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் குறித்து கேட்­ட­போதேஇ மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டி­ருக்கின்றது எனக் கூற முடி­யா­தி­ருக்­கின்­றது. ஏனென்றால் நாங்கள் அங்கு செயற்­பட முடி­யா­த­வாறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அங்கு பணி­யாற்­று­கின்ற அலு­வ­லர்­க­ளி­னா­லேயே இந்த முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன. இதுதான் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

மத்­திய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களே அலு­வ­லர்­க­ளாக கட­மை­யாற்­று­கின்­றார்கள். அவர்கள் இது­கால வரை­யிலும் ஆளு­னரின் சொற்­படி, அவ­ரு­டைய ஆணைக்குக் கட்­டுப்­பட்டு பணி­யாற்றி வந்­துள்­ளார்கள். இப்­போது நாங்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் செயற்­ப­டும்­போது, ஆளு­னரின் அனு­ம­தியைப் பெற வேண்டும், அவ­ரு­டைய அனு­ம­தி­யில்­லாமல் செயற்­பட முடி­யாது என்று முட்­டுக்­கட்டை போடு­கின்­றார்கள்.
நாங்­க­ளாக ஏதேனும் பணி­களைச் செய்­தாலும், அவற்­றிற்கு ஆளு­னரின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்று குழப்­பு­கின்­றார்கள். இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்கவின் கவ­னத்­திற்கு நாங்கள் கொண்டு வந்­துள்ளோம். அவர் இது­பற்றி ஜனா­தி­ப­தி­யுடன் பேசி ஒரு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

ஒருங்­கி­ணைப்பு குழுவின் இணைத்­த­லைமை

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களின் அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது. அது­பற்றி அதி­கா­ரிகள் எங்­க­ளிடம் கலந்து பேச­வில்லை. அழைப்பு மாத்­திரம் அனுப்­பப்­பட்­டி­ருந்­ததுஇ மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு தலை­மையின் கீழ் இந்தக் கூட்டம் நடத்­தப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றி­ருக்­கையில் அந்த அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­தியின் எந்த அறி­வித்­த­லுக்­க­மைய செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதைத் தெரி­விக்­கு­மாறு நாங்கள் கோரி­யி­ருந்தோம். கூட்­டத்தில் நாங்கள் கலந்து கொள்­ள­வில்லை.

இந்த நிலையில் ஒருங்­கி­ணைப்பு அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டத்­திற்கு என்­னையும் ஒரு இணைத்­த­லை­மை­யாக நிய­மித்து ஜனா­தி­பதி அனுப்பி வைத்த கடிதம் வந்து கிடைத்­தி­ருக்­கின்­றது.

அந்தக் கடி­தத்தில் மஹிந்த சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­லான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்த இணைத்­த­லைமை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும்இ இந்தக் கூட்­டத்தில் மஹிந்த சிந்­த­னையைச் செயற்­ப­டுத்­து­கின்ற அதி­கா­ரிகள் கலந்து கொண்டு செயற்­ப­டு­வார்கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மஹிந்த சிந்­த­னையை முன்­வைத்து வட­மா­காண தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்­களை மக்கள் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றார்கள். நாங்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். மஹிந்த சிந்­தனை என்ற தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டைய சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்ற தேவை எங்­க­ளுக்குக் கிடை­யாது.

மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு சபை இருக்­கும்­போது, அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்­பாக மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தக் கூட்டத்திற்குத் தலைமைத்துவம் வழங்கிச் செயற்பட வேண்டிய தேவை என்ன என்பதும் தெரியாமல் இருக்கின்றது.

தமது மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுடைய தேவைகளை அரசியலாக்கிச் செயற்படுவதை ஏற்க முடியாது. ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகின்றது. எனவே இந்தக் கூட்டம்பற்றியும்இ இணைத் தலைமை பற்றியும் என்னை அழைத்துப் பேசியிருந்தால் அந்த விளக்கங்களை நான் கேட்டிருப்பேன். எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்குரிய விளக்கங்களைப் பெறாமல் எதனையும் செய்ய முடியாது.

7 comments :

Anonymous ,  November 25, 2013 at 10:30 AM  

First you comply and then complain.
Always Complaining cannot bring any successful results.

Anonymous ,  November 25, 2013 at 10:43 AM  

Birds of the same feather flock together

Anonymous ,  November 25, 2013 at 11:33 AM  

உமக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாததற்கு உம்முடைய இந்த அறிக்கை சிறந்த உதாரணம்.
கோயில்ல பிரசங்கம் பண்ணின உம்ம முதலமைச்சரா தெரிவு செய்தது மக்கள் செய்த பாரிய தவறு!

இந்த நாடு இந்தளவு அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல காரணம் மகிந்த சிந்தனை தான்! மகிந்த சிந்தனை இல்லாவிட்டால் நீர் முதலமைச்சரா வந்திருப்பிரா? மகிந்த சிந்தனையை பற்றி கதைப்பதற்கு உமக்கு என்ன தகுதி உள்ளது.

கொழுப்பில் செகுசாக வாழ்ந்த நீர் நாட்டில் நடந்த எந்த பிரச்சனைக்களுக்காவது முகம் கொடுத்துள்ளீரா? இப்ப அறிக்கை விடுறாராம் அறிக்கை! அரசியல் அறிக்கை விடுவதற்கும் ஓர் தகுதி வேண்டும்!
நீர் பேசாமல் உம்மன்ட உந்த பதவியை இராஜினாமா செய்தீர் என்றால் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இராது! இப்ப தமிழர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை நீயும் நீர் விடும் அறிக்ககையும் தான்.

மகிந்த சிந்தனையை இல்லாவிட்டால் யாழில் பஸ் ஓடாது மாட்டு வண்டிதான் ஓடும். மகிந்த சிந்தனையை இல்லாவிட்டால் யாழில் மின்சாரம் இராது மண்ணெண்ணை குப்பிதான் இருக்கும். மகிந்த சிந்தனையை இல்லாவிட்டால் யாழில் அரிசியிருக்காது பனம்பாணிதான் இருக்கும் மொத்தத்தில் யாழ் மக்கள் வாழ்வதே மகிந்த சிந்தனையையால தான்!

உமக்கு இது விளங்கியும் விளங்காத மாதிரி நடிக்கிறாய் ஏன் தெரியுமா உம்மண்ட பொக்கற் இன்னும் நிரம்ப இல்லைதானே. உம்மண்ட பொக்கற் நிரம்பயினால் எல்லாம் தானாக சரிவரும்!

Anonymous ,  November 25, 2013 at 1:35 PM  

There is no end to the fates of northern societies.A kind of curse might go to generation to generation.

Anonymous ,  November 25, 2013 at 3:33 PM  

May be he is expecting the philosophies of Karl Max ,Socrates of Greek other than that he will never.....?

Anonymous ,  November 25, 2013 at 11:50 PM  

If you and Your TNA are not interesterd to do Mahintha Sinthanai, then you and Your TNA has to use Your own Money to develope the Norh Province With Your LTTE and LTTE diasporas from All over the world.

Better, you get all Your funds from LTTE and LTTE diasporas from other countries and develope Your northen province!

This is good for you and Your basterds Some of TNA politiciens.

You all can give the Tamils there own Tamil Ealam tooo!

Congratulations and good Luck Vicky/TNA porukkies!

Anonymous ,  November 26, 2013 at 6:03 AM  

You have many things to do,simply gossiping and despise another would
not bring any benefits to the voters who trusted you.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com