Tuesday, November 12, 2013

பதுளை மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற அமுதவிழா!!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் 80வது வருட பூர்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அமுத விழாவானது பதுளை நூலக சேவை கேட்போர் கூடத்தில் கடந்த 9.11.2013ல் வித்தியாலய அதிபர் திருமதி டி.செல் வரட்ணம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் ஏ.நடராஜன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஊவா மகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் அவ் விழாவின் போது அர்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர், ஆசிரியைகள் பாராட்டப்பட்டதுடன் வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்” வலம்புரி” என்ற சிறப்பு நூலும் விழாவின் போது வெளியிடப்பட்டது. மற்றும் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப் பட்டன.

(எஸ்.சிவகாந்தன்)

No comments:

Post a Comment