Wednesday, November 27, 2013

எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கான தடையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்தது அவுஸ்திரேலியா!

எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கான தடையை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியா நீடித்ததுள்ளது இந்த அறி விப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக் கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்புடன் அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடைகளும் நீடிக்கப்பட்டுள்ளன. புலிகள் அமைப்பிற்கு அவுஸ்திரேலியாவில் எவ்விதமான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட இடமளிக்க முடியாதென அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.

பயங்கரவாதம் அவுஸ்திரேலியாவுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டி ருக்கும் அவர் எந்தவகையிலான பயங்கரவாத செயற்பாடுகளையும் தமது அரசாங்கம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. It's a joke. LTTE is going to have a maveerar naal in melbourne today

    ReplyDelete