கம்புறுபிட்டிய இரட்டை கொலைச் சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!
மாத்தறை, கம்புறுபிட்டிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், அவரின் மனைவியும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை நடைபெற்ற பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளாதா பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த துப்பாகியொன்றை தேடுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸாரை நோக்கி சூடு நடத்தியதாகவும் இதனையடுத்து பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment