Friday, November 8, 2013

பல நாட்களாக நீடித்துவந்த சிராஸ்- ரவூப் யுத்தம் முற்றுப்பெற்றது! கல்முனை புதிய மேயராக காரியப்பர் நியமனம்!

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்ததையடுத்து கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள் ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான தாருஸல்லாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் தனக்கு வழங்கப்பட்ட கல்முனை மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிப் தனது இரண்டு வருடங்கள் நிறைவில் இன்று வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துகொண்டர். அவர் தனது இராஜினாமா கடித த்தினை அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே இன்று கையளித்தார் என்பது குறிப் பிடத்தக்தாகும்.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment