சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள காரணத்தினாலும் இலங்கையின் அதிகமான பிரதேசங்களில் மழை பெய்வதனாலும் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக கடந்த காலங்களில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகளும் தீவரமாக முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.
இதனைக் கவனத்தில் கொண்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களான எஸ்.எல். மன்சூர், எம்.எம். விஜிலி, திருமதி வை. அமிர்தசங்கர், எஸ்.எஸ். ஜாரியா, மஜிதா தாஸிம் ஆகியோர் கலந்து தங்களுடைய பங்களிப்பை செலுத்தியள்ளார்கள்.
டெங்கு ஒழிப்பு தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கருந்தரங்கு ஒன்றும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment