Sunday, November 3, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பா அல்லது ஈபிடிபியா அரசுடன்? கூட்டமைப்பின் திருகுதாளம் அம்பலம்! சித்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் துறையில் அறிவி ப்பாளராக பணியாற்றிய புலி உறுப்பினராகிய இசைப் பிரியா யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத் திடம் சரணடைந்ததாகவும், அதன் போது இராணுவத்தால் பாலியல் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொலை செய் வதான வீடியோவினை பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.

இது இவ்வாறு இருக்க இசைப்பிரியாவின் கொலை தொடர்பாக இதுவரை இரண்டு அமைப்புக்களே இலங்கையில் தமது கண்டனத்தை வெளியிட்டு பக்கச் சார்பற்ற விசாரணையை கோரியுள்ளது. அதில் வழமை போல் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. இதைத் தான் அந்தக் கட்சி தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. அவர்கள் புலிகளின் பினாமிகள் தானே.

மற்றது, ஈபிடிபி இக் கொலையை கண்டித்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளது. ஈபிடிபி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இக் கொலையானது இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக அரசு உடனடியாக விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குகளைப் பெற்று அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போவதாகவும், மாவீரர் துயிலும் இல்லங்களை அமைக்கப் போவதாகவும் வெட்டி அறிக்கைகளை விட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வீடியோ வெளியாகி 3 நாட்கள் கடந்துள்ள போதும் எந்தவிதமான கருத்துக் களையும் வெளியிடவில்லை. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என எவருமே இது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இது புலிகள் தொடர்பாகவும், சனல் 4 வின் போலி முகம் தொடர்பாகவும் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.

உண்மையில் புலிகள் என்ற பெயரை தேர்தலுக்காகவே கூட்டமைப்பு இன்று வரை பயன்படுத்துகின்றது என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்த செய்திகளுக்கும் பின் அதாவது ஈபிடிபியின் அறிக்கைக்கு பின் தம் இருப்பை தக்க வைக்க கண்டன அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

1 comment:

  1. ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழுத கதைதான் ஈபிடிபி யின் அறிக்கை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களில் சரியாகத்தான் நடந்து கொள்கின்றது. ஒரு பயங்கரவாதிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக்கொள்ளாது என்பதையும் பும்பெயர் தமிழரின் பொய்பிரச்சாரத்திற்கு அவர்கள் துணைபோக மாட்டார்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் சித்தா.

    ReplyDelete