Monday, November 4, 2013

வெள்ளவத்தை ஆடையகம் முன்பாக இளம் தாய் மீது கத்திக்குத்து! பலர் முன்னிலையில் துணிந்து கைவரிசை

மது போதையில் வந்த நபர் ஒருவர் வெள்ளத்தை ஆடையகம் முன்னாள் வைத்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்க இளம் தாய் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் வாசலில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆடையகத்தை நெருங்கிய தருணத்தில் அங்கு மது போதையில் வந்த நபரொருவர் குறித்த தாயின் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதன் போது அருகில் நின்றிருந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

குறித்த இளம் தாயை கொலை செய்யும் நோக்குடனேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. தான் அத்தாய் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட போது அருகில் இருந்தவர்கள் தன்னை பிடித்ததாகவும் இதன்போது தனது கையிலிருந்த கத்தி தவறி விட்டதாகவும் இல்லையேல் அப்பெண்ணை கொலை செய்திருப்பேன் எனவும் சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்தலத்துக்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் காயமடைந்த பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் தடயப் பொருட்களையும் மீட்டுள்ளனர். இக்கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கத்தியை மீட்டுள்ள பொலிஸார் பெண்ணின் பாதணிகளையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது குடிபோதையில் இருந்துள்ளார். சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com