நானும் நல்லதொரு தீர்க்கதரிசியே! நான் சொல்பவை சரியாக நடக்கிறது! தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர்!
இன்னும் 03 ஆண்டுகள் செல்லும் போது இலங்கையின் பிரதான நகரமாக ஹம்பாந்தோட்டை மிளிரும். இதனை எங்கேனும் ஓர் இடத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் மூன்று ஆண்டுகளில் நீங்களே சொல்வீர்கள் நான் சிறந்த்தொரு தீர்க்கதரிசியென்று. நான் சொல்பவை சரியாக நடக்கும்“
திஸ்ஸமகாராம ரஜமகா விகாரையோடு ஒன்றிணைந்த காவன்திஸ்ஸ ஹோட்டல் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களை விளித்துப் பேசியபோதே பிரதமர் தி.மு. ஜயரத்ன மேற்க்கண்டவாறு குறிபிப்பிட்டார்.
சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட மதக் கிரியைகளின் பின்னரே இந்த ஹோட்டல் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. கெயா சர்வதேச நிறுவனத்தின் அநுசரணையின் நடாத்தப்பட்டுவருகின்ற இந்த ஹோட்டல் பாடசாலையில் மூன்று பாடநெறிகளை 80 மாணவ மாணவியர் கற்கின்றனர்.
பிரதமர் தி.மு. ஜயரத்ன இவ்வாறும் குறிப்பிட்டார்.
“என்னை மூன்று முறை பாராளுமன்றத்திலிருந்து வெளியே போட்டிருக்கிறார்கள். ஷமல் ராஜபக்ஷ சபாநாயகராக இருக்கும்போது யாரும் அவ்வாறு வெளியே போடவில்லை. வெளியே வேண்டுமென்றால் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என்றாலும், அவர் அவர் அவ்வாறு செய்யாமல் முன்மாதிரியாக பாராளுமன்றத்தை கடமைகளைச் செய்கிறார்“
(லக்பிம / கேஎப்)
1 comments :
He seems to be a good politican,his qualities are very lack of boasting,beating his own drums.He works silenty and truly. He almost touched our hearts.may God bless him.
Post a Comment