ஏதோவொரு நாடு பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிப்பதால், இலங்கைக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படாது - பிரிட்டிஷ்
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை, சர்வதேச நாடுகள் பகிஷ்கரிக்கக்கூடாதெனவும், அவ்வாறு பகிஷ்கரிப் பதனால் பொதுநலவாயத்தின் எதிர்காலம் பாதிக்கப்படு மென்றும், பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஒரு சில நாடுகள் தவறான தகவல்களை தெரிவித்த போதிலும், அதனை பொதுநலவாய மாநாட்டிற்கான தடையாக கொள் ளக்கூடாதென, வில்லியம் ஹேக் டெய்லி டெலி கிராப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை மக்கள் பல்வேறு அசௌகரியங் களை எதிர்கொண்ட போதிலும், இலங்கை அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, நடவடிக்கை மேற்கொண்டது. அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை பல்வேறு தரப்புகள் விமர்சித்த போதிலும், அதனை உண்மையாக கண்டறிவதற்கு, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதே, சிறந்தது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனின் வருகையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர், தமது பிரதமரின் வடபகுதி விஜயம் தொடர்பாகவும், கருத்துகளை வெளியிட்டுள்ளார். வடபகுதி மக்களின் நலன்களை கேட்டறிவதில், டேவிட் கெமரன் ஆர்வத்துடன் இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் தாம் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அவர் அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதோவொரு நாடு பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரித்தால், அதனால் இலங்கை க்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படாதெனவும், அது பொதுவாக பொதுநலவாய அமைப்பின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாக அமையுமெ ன்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள், பொதுநலவாய மாநாட்டின் எதிர்கால செயற்பாடுக ளுக்கு குந்தகமாக அமையுமென தெரிவித்துள்ள வில்லியம் ஹேக், இலங்கை இம்மாநாட்டை நடாத்துவதன் மூலம், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்குமெனவும், மேலும் தெரிவித்துள்ளார்.
3 comments :
Each member countries of the commonwealth should know why they are united and for what purposes that they are united,if they do realize the truth, it is pretty sure they will never boycott the conferrence for minor reasons or for the unnecessary internal pressure.Hon Minister Mr.William Haugue had given a very good explanation.We think the opposers will learn more lessons in future.
What all the fuss is about.We do believe that India kicks up fuss.fussy politicians thinking over their internal pressure.
However what ever it is Srilanka would do its best to conduct a
marvellous conferrence.
Post a Comment