இலங்கைக்கு கிடைத்த பயன்களை மட்டிடவே முடியாதாம் - பீரிஸ்
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினூடாக, இல ங்கைக்கு கிடைத்த பயன்களை மட்டிட முடியாது எனவும், அந்தளவு பயன்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார அமைச்சில் ஊடகவியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவ ர்கள் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பார்த்தார்கள். அவர்களின் மன உறுதியையும் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையை யும், பாராட்டினர். மாநாடு கொழும்பிற்கு மத்திரம் வரையறுக்கப்படவில்லை. இளைஞர் மாநாடு, ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. கொழும்பில் வர்த்தக மாநாடு நடைபெற்றது.
இதில் 86 நாடுகள் கலந்து கொண்டன. இலங்கையின் நற்பெயருக்கு இதனூடாக, சாதகமான நிலை தோன்றியது. சில அரச தலைவர்கள், எம்முடன் தனிப்பட்ட முறையில் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அவர்கள் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக பெருமையடைவதாக கூறினர். கொழும்பு பிரகடனத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
சுற்றுலாத்துறையை நோக்கும்போது, ஹொட்டேல்களுக்கு கூடுதலான வருமானம் கிடைத்தது. மாணிக்க கல் ஆபரணங்களுக்கு கூடுதலான கேள்வி நிலவியது. அவுஸ்திரேலியாவிலிருந்து கிடைத்த பெறுமதி வாய்ந்த இரண்டு கப்பல்களையும் பாருங்கள். அத்துடன் பாரிய அளவிலான முதலீட்டாளர்களும் இந்நாட்டுக்கு வருவார்கள் என, நாம் எதிர்பார்க்கின்றோம். பாரியளவிலான வர்த்தகர்கள், எமது நாட்டின் மீது கூடுதலான கவனம் செலுத்தியுள்ளனர் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment