Friday, November 22, 2013

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை, நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளார்!

பொலிஸ் செல்வாக்கை பயன்படுத்தி முறைப்பாட்டாளரை மிரட்டக் கூடாதென பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான வசந்த பிரேம குமாரவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் கடுமையாக எச் சரித்தார்.முறைப்பாட்டாளரான வர்த்தகர் அமந்த நாண யக்காரவை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் பம்ப லப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி வசந்த பிரே மகுமார சார்ஜன்ட் சரத் சொய்ஸா, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நதீ குமாரி விஜேசிங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தொலைக்காட்சி தொகுப்பாளர் நதீ குமாரி முறைப்பாட்டாளருடன் கள்ள உறவு கொண்டிருந்தார். நதீ குமாரி தனக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையிலான உறவை அவரது மனைவிக்கு கூறப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.இறுதியில் நதீ குமாரியின் தொல்லை தாங்க முடியாத வர்த்தகரான அமந்த நாணயக்கார பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இவ்விடயத்தை விசாரித்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிஇ சார்ஜன்ட் மற்றும் நதீ குமாரி உடன் சேர்ந்து முறைப்பாட்டாளரிடமிருந்து பணம் பறித்ததாக கூறப்பட்டது.இவர்கள் 3.5 மில்லியன் ரூபாவை மிரட்டி பறிக்க முயன்றமை தொடர்பாக கொழும்பு குற்றச்செயல் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.அவர்களை இன்று வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் பணித்தார். பின்னர் இவர்கள் தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com