Saturday, November 16, 2013

யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை தேவையில்லை – நியூசிலாந்து

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியதில்லை என்பதே நியூசிலாந்தின் நிலைப்பாடு என நியூசிலாந்து வெளிவிவாகர அமைச்சர் மரே மக்கலே தெரிவித்துள்ளார்.

மேலும் பால் உற்பத்தி இறக்குமதிகள் தொடர்பில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் இலங்கை தொடர்பில் நியூசிலாந்து மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், மத்திய அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இதுவரையில் ஏற்படவில்லை இதற்கு சிலர் இடையில் முட்டுக்கட்டையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

2 comments:

  1. Autralia and new zealand are the countries which are coming out of the illusion of wrong images about Sri lanka given to them systematically.The traitors shows will not last for long.The cloudy sky is gradually getting clear.

    ReplyDelete
  2. தமிழ் தலைவர்கள், அரசியல் மேதாவிகள், அறிவுக்கொழுந்துகள், புலன் கூடியவர்கள்..
    அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான, தூரநோக்கு கொண்டு நடந்திருந்தால்,.........

    ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எப்போதோ ஒரு காந்திரமான முடிவை எட்டியிருக்கலாம்.

    ஆனால், விட்டார்களா? ..
    அல்லது சிந்தித்து நடந்தார்களா?.....

    இன்றும் அதே தவறுகளை செய்துகொண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

    சந்தர்பங்களை பாவித்து மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை மேலும் விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.

    அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

    Who cares us?

    ReplyDelete