Thursday, November 7, 2013

தீபாவளிக்கு பரதநாட்டியம் ஆடிய மிச்சேல் ஒபாமா! (படங்கள்)

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்ற தீபாவளி விழா வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ´கோல்ட் ஸ்பாட் பேண்ட்´ என்ற இந்திய இசை மற்றும் நடனக் குழுவினர் பாலிவுட் இசையை முழக்க வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் கோலாகல தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு என இந்திய வம்சாவழி ஆடை வடிவமைப்பாளர் தயாரித்த புத்தாடையை அணிந்து வந்த மிச்சேல் ஒபாமா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

அங்கு கூடியிருந்த விருந்தினர்களிடம் கலகலப்பாக பேசிய அவர், ´பாலிவுட் இசைக்கு என்னாலும் நடனம் ஆட முடியும் என்று நினைக்கிறேன். ஆனாலும், இவர்களை (இசை குழுவினர்) போல் ஆட முடியாது.வெள்ளை மாளிகையில் இந்த பகுதியில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த தருணம் மிகவும் இனிமையானது´ என்று கூறினார்.



No comments:

Post a Comment