Tuesday, November 19, 2013

பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

290 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை ஆழமாக தாக்கும் திறன் பெற்ற இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

2.8 மேக் வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த ஏவுகணை 300 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை ஏந்திச்செல்லும் திறன் கொண்டது என்பதுடன் நிலம், கடல் மட்டம், ஆகாயம், கடலுக்கு அடியில் என பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்டிணன்ட் ஜெனரல் அமித் சர்மா மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதுடன் ஏற்கனவே இந்திய ராணுவமும், கடற்படையும் இந்த ஏவுகணையை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள நிலையில், விரைவில் விமனப்படையிலும் இந்த ஏவுகணை சேர்க்கப்பட உள்மை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com