ஏறாவூர் பிரதேசத்தில் கைக் குண்டு மீட்பு
ஏறாவூர், மதுரன்காடு பிரதேசத்திலிருந்து கைக் குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலி ஸாருக்கு நேற்று (11) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதவானின் உத்தரவின் படி, கல்லடி இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் கைக்குண்டு செயலிழக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட் டுள்ளனர்.
0 comments :
Post a Comment