Wednesday, November 27, 2013

வடக்கில் மீள்குடியேறிய குடும்பங்களின் சிறார்கள் போஷாகின்மையால் பாதிப்பு: ஜப்பான்

வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களில் உள்ள சிறுவர்கள், போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.

சிறுவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவுகளை வழங்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் 282 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஊடாக உலக உணவுத் திட்டம் மேற்கொண்டு வரும், வடபகுதி பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துடன் இணைத்து மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment