அறநெறிப் பாடசாலையில் பிள்ளையை விட்டுவிட்டு வீடு திரும்பிய பெண் வெட்டிக் கொலை! கணவரும் தற்கொலை
தனது பிள்ளையை அறநெறிப் பாடசாலையில் விட்டு விட்டு வீடு திரும்பிய பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (24) முற்பகல் மத்தேகொட, சந்துன்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரான முச்சக்கர வண்டிச்சாரதி ஒருவரே இக்கொலையை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த முச்சக்கர வண்டிச்சாரதி விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
குடும்பத்தில் நிலவிவந்த காணித்தகராறு ஒன்றே இக்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment