நாங்களும் பணக்காரர்கள்தான் என்று உலகிற்குச் சொல்ல இது நல்ல சந்தர்ப்பமாம்! - சொல்றார் அமுனுகம
இலங்கை வலுவான பொருளாதாரத்துடன் கூடிய நாடு என்பதை தெளிவாக உலகிற்குக் காண்பிப்பதற்கு, நடை பெறவுள்ள பொதுநலவாய மாநாடு நல்லதொரு சந்தர்ப் பமாகும் என சிரேட்ட அமைச்சரும்,நிதித் திட்டமிடல் பிரதி யமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் முதலீடுகளை செய்யுமாறு நேரடியாக இதன்போது அழைப்பையும், கோரிக்கையையும் விடுக்க முடியும்.
“2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பே, இலங்கைப் பொருளாதாரம் சரியான வழிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதியின் தூரநோக்குக் கொண்ட தலைமைத்துவம் காரணமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது.
கடல்வழிகளைக் கவனத்திற் கொள்ளும் பொழுது, இலங்கை கேந்திர முக்கியத்து வம்மிக்க இடத்தில் அமைந்துள்ளது.
இதனால் சர்வதேச ரீதியில் பொருளாதாரப் பலம்மிக்கவர்கள் தமது பணத்தை முதலீடு செய்ய முக்கிய இடமாக இலங்கை விளங்குகின்றது என்பது தெளிவானது.
சுற்றுலாத் துறையில் செங்ஸ்ரீலா, ஹயட், மொவன்பிக் முதலான வெளிநாட்டு முதலீட்டான ஓட்டல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. தற்போதுள்ள ஹில்டன், தாஜ் சமுத்ரா முதலான ஓட்டல்கள் தொடர்பில் எங்களுக்கு மகிழ்ச்சியடைய முடியும். அதேபோல, சினமன் லேக்ஸயிட், கிங்ஸ்பரி, வோட்டர்ஸ் ஏஜ் முதலிய ஓட்டல்களும் அவ்வாறுதான். இதுதவிரவும், சிற்றளவு முதலீட்டாளர்களையும் அரசாங்கம் மறந்துவிடவில்லை. அவர்களுக்குக் கைகொடுக்கும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
தற்போதைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வருகைதந்த உல்லாசப் பயணிகள், அங்குள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு அவ்வளவு விருப்புக் காட்டவில்லை. நாட்டில் அங்கும் இங்கும் செல்வதற்குக் கூட முடியாமற் போனதையிட்டு கவலைப்பட்டார்கள். அதனைக் கருத்திற் கொண்டு சிங்கப்பூர் அரசாங்கம் உலகிலேயே பாரியளவிலான இரண்டு உல்லாசப் பயணிகளுக்கான கட்டடங்களை நிர்மாணித்தது. சகலவித வசதிகளுடனும் கூடியதாய் அது அமைந்தது. வேல்ட் சன்டோஸா ஓட்டல் உலகப் புகழ்பெற்ற உல்லாச விடுதியாக மாறியது. அவ்வாறுதான் மரீனா பே செண்ட் உருவாகியது. இந்த உல்லாச விடுதிகளை உலகம் அதிசயமாகவே பார்க்கின்றது“ என்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment